சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
அச்சோ. பாவம் அது! பொன்னியின் செல்வன் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜே மணிமேகலை செய்த அட்ராசிட்டியை பார்த்தீர்களா! வைரல் வீடியோ!!
சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபல தொகுப்பாளினியாக வலம் வந்தவர் மணிமேகலை. தனது கலகலப்பான பேச்சால், சிரிப்பால் அவர் ஏகப்பட்ட ரசிகர்களை பெற்றார்.
பின் விஜய் டிவிக்கு தாவி சில நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்துக் கொண்டு தனது சேட்டையால், கலகலப்பான செயல்களால் பெருமளவில் பிரபலமானார். சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வருகிறார். மணிமேகலை சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கக் கூடியவர். யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இன்று பொன்னியின் செல்வன் படத்திற்கான ட்ரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. அதற்கு வருகை தந்த மணிமேகலை பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்றுள்ள அருள்மொழிவர்மனின் குதிரைக்கு பிஸ்கட் ஊட்டியுள்ளனர். மேலும் படத்திற்கு வாழ்த்துக் கூறி அவர் அவ்வாறு செய்ததாகவும் கூறியுள்ளார். இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த நிலையில் அது வைரலாகி வருகிறது.