ப்பா.. இப்படியொரு தீவிர ரசிகரா! நடிகர் சோனு சூட்டை காண அவர் செய்த காரியத்தை பார்த்தீர்களா! தலைவரே ஷாக்காகிட்டாரே!

ப்பா.. இப்படியொரு தீவிர ரசிகரா! நடிகர் சோனு சூட்டை காண அவர் செய்த காரியத்தை பார்த்தீர்களா! தலைவரே ஷாக்காகிட்டாரே!



man-travel-1200-km-to-see-sonu-sood

தமிழ் சினிமாவில் பல படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகர் சோனு சூட். இவர் எக்கசக்கமான பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் சோனு சூட் சினிமாவில் வில்லனாக நடித்தாலும் உண்மையில் நல்ல உள்ளம் படைத்த ஹீரோவாவார். இவர் கொரோனா காலகட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கு எண்ணிலடங்கா உதவிகளை செய்துள்ளார். 

புலம்பெயர் தொழிலாளிகளை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்ப வாகனங்கள் ஏற்பாடு செய்வது, வெளிநாட்டில் தவித்த மாணவர்களை தனி விமானத்தின் மூலம் தாய்நாட்டிற்கு அழைத்து வந்தது, விவசாயிகளுக்கு உதவுவது, மாணவிகளுக்கு உதவுவது என ஏராளமான நல்ல காரியங்களை செய்துள்ளார். நடிகை சோனு சூட்டிற்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இந்த நிலையில் ஏராளமான நலத்திட்ட உதவிகளை செய்து வரும் சோனு சூட்டை பார்ப்பதற்காக அவரது தீவிர ரசிகர் ஒருவர் காலில் செருப்பு கூட அணியாமல் 1200 கிலோ மீட்டர் சைக்கிளில் பயணித்து மும்பையில் உள்ள நடிகர் சோனு சூட் வீட்டுக்கு  வந்து அவர் செய்த பல உதவிகளுக்கும் நன்றி கூறியுள்ளார். நடிகர் சோனு சூட் அவரைக் கையெடுத்துக் கும்பிட்டு வரவேற்றுள்ளார். மேலும் அந்த ரசிகருக்கு புதிதாக செருப்பு வாங்கி கொடுத்து வழியனுப்பி வைத்துள்ளார்.