"சின்னத்திரைக்கு வரும் நடிகை மாளவிகா!" வெளியானது புதிய தகவல்!

"சின்னத்திரைக்கு வரும் நடிகை மாளவிகா!" வெளியானது புதிய தகவல்!



Malavika re entry in serials

1999 ஆம் ஆண்டு வெளியான "உன்னைத்தேடி" திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மாளவிகா. தொடர்ந்து "ஆனந்தப் பூங்காற்றே" படத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களிலுமே அவர் அஜித்துடன் நடித்திருந்தார்.

malavika

அதற்கடுத்து மாளவிகா நடித்த சில படங்கள் மெகா ஹிட்டாக அமைந்தன. ஆரம்பத்தில் வெற்றிப்படங்களில் நடித்த மாளவிகா, அதையடுத்து நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி பெறவில்லை. இதையடுத்து கேமியோ ரோல் மற்றும் ஒரு பாடலுக்கு ஆடுவது மாளவிகா.

குறிப்பாக இவர் ஆடிய "வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்" பாடல் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது. 2007ம் ஆண்டு சுமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட மாளவிகாவிற்கு 2008ம் ஆண்டு ஒரு மகன் பிறந்தார். தமிழ், கன்னடம், ஹிந்தி மொழிப்படங்களில் நடித்துள்ளார் மாளவிகா.

malavika

இந்நிலையில், பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் இவர் தற்போது சின்னத்திரைக்கு வர உள்ளாராம். பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "ஊ சொல்றியா ஊ ஊ சொல்றியா" என்ற நிகழ்ச்சிக்கு நடுவராக பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.