மீண்டும் தமிழில் ரீ எண்ட்ரி கொடுக்கும் நடிகை மாளவிகா... யார் படத்தில் தெரியுமா.?

மீண்டும் தமிழில் ரீ எண்ட்ரி கொடுக்கும் நடிகை மாளவிகா... யார் படத்தில் தெரியுமா.?



Malavika re entered in tamil movie

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் இணைந்து உன்னை கொடு என்னை தருவேன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மாளவிகா. அதனை தொடர்ந்து அவர் ஆனந்த பூங்காற்றே, ரோஜா வனம், வெற்றிக்கொடிகட்டு,  பேரழகன், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், சந்திரமுகி, நான் அவன் இல்லை, திருட்டுப்பயலே என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பின்னர் நாளடைவில் அவருக்கு படவாய்ப்புகள் குறைந்த நிலையில் அவர் துணை நடிகையாகவும், ஒரு பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடுவது என இருந்தார். பின்னர் 2007ஆம் ஆண்டு சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டிலானார். 

malavika

இந்நிலையில் தற்போது சுந்தர். சி இயக்கி வரும் புதிய படத்தின் மூலம் மீண்டும் தமிழில் ரீ எண்ட்ரி கொடுக்கவுள்ளார் நடிகை மாளவிகா. மேலும் இப்படத்தில் மங்கம்மா என்ற கேரக்டரில் நடிக்கும் மாளவிகாவுக்கு ஜோடியாக, மனோபாலா நடித்திருப்பதாக தெரிவிக்கின்றனர்.