சினிமா

திடீர் மாரடைப்பு! 37 வயது பிரபல இளம் இயக்குனர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!

Summary:

பிரபல மலையாள இயக்குனர் 37 வயதில் மாரடைப்பு ஏற்பட்டு கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

2015-ம் ஆண்டு வெளியான கரி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஷாநவாஸ். அப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து ஷாநவாஸ் ஜெயசூர்யா, அதிதி ராவ் நடிப்பில் சூஃபியும் சுஜாதையும் என்ற படத்தை இயக்கினார். இப்படம் கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கால் கடந்த ஜூலை மாதம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. 

அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் இயக்குனர் ஷாநவாஸ் பாலக்காடு அருகே அட்டப்பாடியில் தங்கி தனது அடுத்த படத்திற்கான பணிகளில் ஈடுபட்டிருந்த நிலையில், திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர் கோவையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு வார காலமாக தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

  

இந்நிலையில் இன்று காலை சமூக வலைதளங்களில் ஷாநவாஸ் உயிரிழந்ததாக தகவல்கள் பரவியது. பின்னர் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து சூஃபியும் சுஜாதையும் படத்தயாரிப்பாளர் விஜய்பாபு தனது பேஸ்புக் பக்கத்தில்,  ஷாநவாஸ் வென்டிலேட்டர் உதவியுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள். அற்புதம் நடக்கும். தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 


Advertisement