விஜய்க்கு என் கதை ரொம்ப பிடிச்சது.! ஆனாலும் பட வாய்ப்பை மிஸ் பண்ணிட்டேன்.! மனம்திறந்த பிரபல இயக்குனர்!!

விஜய்க்கு என் கதை ரொம்ப பிடிச்சது.! ஆனாலும் பட வாய்ப்பை மிஸ் பண்ணிட்டேன்.! மனம்திறந்த பிரபல இயக்குனர்!!


makil-thirumeni-talk-about-missing-thae-movie-chance-wi

தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் விஜய். அவர் தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரிசு படத்தில் நடித்து வருகிறார். நேஷனல் கிரஷ் ராஷ்மிகா இந்த படத்தில் விஜய்க்கு நடிக்கிறார். 

படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இதற்கிடையில் வாரிசு படத்தில் இடம்பெற்ற ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடல் வெளியாகி செம ஹிட்டாகியுள்ளது. இதனை தொடர்ந்து தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 67வது படத்தில் நடிக்கின்றார்.

vijay

இந்த நிலையில் தடையற தாக்க, தடம் போன்ற தரமான படங்களை கொடுத்துள்ள இயக்குனர் மகிழ் திருமேனி தளபதி படத்தை மிஸ் செய்து விட்டதாக கூறியுள்ளார். அவர் தற்போது உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்துள்ள கலகத்தலைவன் படத்தை இயக்கியுள்ளார்.

இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தனக்கு விஜய் நடிப்பில் இயக்க வாய்ப்பு வந்ததாகவும், தனது கதை அவருக்கு மிகவும் பிடித்ததாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் அப்பொழுது உதயநிதி நடிப்பில் கலகத்தலைவன் படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு வந்ததால் அதனை நான் மிஸ் செய்துவிட்டேன் எனவும் அவர் கூறியுள்ளார்.