அரபிக்குத்து பாடலுக்கு அசத்தலாக ஆட்டம்போட்ட பிரியங்கா! மாகாபா டான்ஸ்தான் வேற லெவல்! வைரலாகும் வீடியோ!!

அரபிக்குத்து பாடலுக்கு அசத்தலாக ஆட்டம்போட்ட பிரியங்கா! மாகாபா டான்ஸ்தான் வேற லெவல்! வைரலாகும் வீடியோ!!


makapa-dance-video-viral

தளபதி விஜய் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் அபர்ணா தாஸ், யோகிபாபு, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பீஸ்ட் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள அரபிக்குத்து பாடல் வீடியோ அண்மையில் வெளியாகி இணையத்தையே தெறிக்கவிட்டு வருகிறது. சிவகார்த்திகேயன் எழுதிய இந்த பாடலை அனிருத் மற்றும் ஜோனிதா காந்தி  பாடியுள்ளனர்.

இந்நிலையில் செம ட்ரெண்டாகி வரும் இந்த அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடிய ரீல்ஸ் வீடியோவை தொகுப்பாளினி ப்ரியங்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ப்ரியங்காவுடன் பாடகர் பென்னி, மாகாபா ஆகியோர் ஆட்டம் போட்டுள்ளனர். அந்த வீடியோ இணையத்தில் பெருமளவில் வைரலாகி வருகிறது.