சினிமா

எலும்புமுறிவு! விஜய் டிவி மாகாபா வெளியிட்ட புகைப்படத்தை கண்டு செம ஷாக்கான ரசிகர்கள்!!

Summary:

எலும்புமுறிவு! விஜய் டிவி மாகாபா வெளியிட்ட புகைப்படத்தை கண்டு செம ஷாக்கான ரசிகர்கள்!!

விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் தொகுப்பாளர் மாகாபா ஆனந்த். இவரது கலகலப்பான பேச்சும், விளையாட்டுத்தனமான செயலும் மக்கள் மனதை பெருமளவில் கவர்ந்தது. 

இவர் பிரியங்காவுடன் இணைந்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். இருவரும் இணைந்து தொகுத்து வழங்கினாலே அந்நிகழ்ச்சியில் கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது. இவர்களுக்காகவே நிகழ்ச்சியை பார்ப்பவர்களும் ஏராளம். சூப்பர் சிங்கர் 8 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டுள்ளது.

இந்த நிலையில் மாகாபா கடந்த வாரம் கையில் கட்டுடன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதனைத் தொடர்ந்து, அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில்,  கை கட்டை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள எக்ஸ்ரே புகைப்படத்தை பகிர்ந்து, “Thumps up taste the thunder” என பதிவிட்டுள்ளார். இதனை கண்டு ஷாக்கான ரசிகர்கள் அவருக்கு விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


Advertisement