நான் நடிச்ச படத்தை விட விஜய்யோட அந்த படம்தான் செம சூப்பர்! பிரபல முன்னணி நடிகர் ஓபன் டாக்!!

நான் நடிச்ச படத்தை விட விஜய்யோட அந்த படம்தான் செம சூப்பர்! பிரபல முன்னணி நடிகர் ஓபன் டாக்!!


mahesh-babu-talk-about-gilli-movie

தெலுங்கு சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் மகேஷ்பாபு. இவருக்கு தெலுங்கு மட்டுமின்றி தமிழிலும் ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. மேலும் மகேஷ்பாபு திரைப்படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் தனி எதிர்பார்ப்பு இருக்கும்.

இவரது நடிப்பில் உருவான சில படங்கள் தமிழில் விஜய் நடிப்பில் ரீமேக்காகியுள்ளது. திரைக்குப்  பின்னால் விஜய் மற்றும் மகேஷ் பாபு இருவருக்கும் இடையே ஒரு நல்ல நட்பு உள்ளது. தெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பில் வெளிவந்த ஒக்கடு என்ற படம்தான் கில்லி என்ற பெரிய தமிழில் ரீமேக்காகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது.

vijay

மேலும் கில்லி திரைப்படம் பெரும் வசூல் சாதனையும் படைத்தது. இந்த நிலையில் மகேஷ்பாபு அளித்த பேட்டி ஒன்றில் தான் நடித்த ஒக்கடு படத்தைவிட தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த கில்லி படம் மிகவும் சிறப்பாக இருந்ததாக கூறியுள்ளாராம். இவ்வாறு மகேஷ் பாபு கூறியதை விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.