வெள்ளத்தால் பெரும் பாதிப்பு! 25 லட்சம் நிவாரண நிதியளித்து சூப்பர் ஸ்டார் விடுத்த வேண்டுகோள்!!

வெள்ளத்தால் பெரும் பாதிப்பு! 25 லட்சம் நிவாரண நிதியளித்து சூப்பர் ஸ்டார் விடுத்த வேண்டுகோள்!!


mahesh-babu-donate-25-lakhs-to-andra-flood-rescue

சமீபத்தில் வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திராவில் நிலைகொண்டது. இதனால் திருப்பதி, சித்தூர், நெல்லூர், கடப்பா போன்ற பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் மண்சரிவு, வெள்ளப்பெருக்கு ஆகியவை ஏற்பட்டு ஆந்திர மாநிலமே கடல் போல காட்சியளித்தது.

 இந்த மழை வெள்ளத்தில் சிக்கி 17க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலர் மாயமாகியுள்ளனர். அது மட்டுமின்றி வெள்ளப்பெருக்கால் பல வீடுகளும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில்  பெருமளவில் வைரலானது. இதனை தொடர்ந்து வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்யும் பொருட்டு பலரும் நிவாரண நிதியை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தெலுங்கு சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து டாப் ஹீரோவாக வலம் வரும் மகேஷ் பாபு வெள்ள நிவாரண பணிகளுக்காக 
ஆந்திர மாநில முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சம் அளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இத்தகைய இக்கட்டான தருணத்தில் பலரும்  முன்வந்து நிதி உதவி செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்வதாகவும் தனது டுவிட்டர் பக்கத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.