
விஜய் சேதுபதியின் மாமனிதன் படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து பாடிய ஏ ராசா' பாடல் வ
விஜய் சேதுபதியின் மாமனிதன் படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து பாடிய ஏ ராசா' பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கூடல்நகர் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சீனுராமசாமி. இவர் தென்மேற்குப் பருவக்காற்று, கண்ணே கலைமானே, தர்மதுறை, நீர்ப்பறவை உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.
இந்நிலையில் சீனு ராமசாமி விஜய் சேதுபதியை ஹீரோவாக வைத்து நான்காவது முறையாக இயக்கியுள்ள படம் மாமனிதன்’. இப்படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக, ஹீரோயினாக காயத்ரி நடிக்கிறார். இந்த படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் இளையராஜா மற்றும் யுவன்சங்கர் ராஜா இருவரும் முதன்முறையாக ஒன்றாக இணைந்து இசையமைத்துள்ளனர்.
இந்நிலையில் மாமனிதன் படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதாவது பா விஜய் எழுதி, யுவன் ஷங்கர் ராஜா பாடிய ஏ ராசா பாடல் இன்று இணையத்தில் வைரலாகி அனைவரின் மனதையும் உருக வைத்துள்ளது.
Advertisement
Advertisement