சினிமா

"கவினை எனக்கு பிடிக்காது.. ஆனாலும்.." மனதில் இருப்பதை அப்படியே போட்டு உடைத்த லாஸ்லியா!

Summary:

losliya talked about kavin in bigboss

இறுதி கட்டத்தை எட்டியுள்ள பிக்பாஸ் சீசன் 3இல் பல சுவாரசியமான சம்பவங்கள் அரங்கேறின. இதில் குறிப்பாக கவின் மற்றும் லாஸ்லியா இடையே உருவான ஒரு நெருக்கம். இவர்களுக்கு இடையே உருவான இந்த நெருக்கத்தால் பிக்பாஸ் வீட்டில் பல்வேறு சர்ச்சைகளும் விமர்சனங்களும் எழுந்தன.

லாஸ்லியாவின் பெற்றோர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த பொழுது லாஸ்லியாவை  மிகவும் கண்டித்துவிட்டு சென்றனர். கவினின் நண்பரும் அறிவுரையை கொடுத்துவிட்டுச் சென்றார். இருந்தாலும் அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் குறித்து யோசிக்காமல் இருக்க முடியவில்லை.

மிகுந்த நெருக்கடிக்கு ஆளான கவின் பிக்பாஸ் அளித்த ஒரு வாய்ப்பினை பயன்படுத்தி வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். இதனால் லாஸ்லியா மற்றும் சாண்டி மிக மனவேதனைக்கு ஆளாகினர். நேற்று நடந்த ஒரு போட்டியில் வெளியேறிய போட்டியாளர்களின் நீங்கள் அதிகம் மிஸ் செய்யும் ஒரு போட்டியாளர் பற்றி பேசுங்கள் என கூறப்பட்டது.

அப்போது பேசிய லாஸ்லியா, "கவின் போனது ரொம்ப கஷ்டமாக இருந்தது. இந்த வீட்டில் முதல் வாரத்தில் இருந்தே எனக்கு பிடிக்காமல் பிடித்தது கவின் தான். எனக்கு கவினை பிடிக்காது. பட் எனக்கு அவனை பிடிக்க ஆரம்பித்தது.

losliya crying க்கான பட முடிவு

ஒரு கட்டத்திற்கு பிறகு அவர் எனக்காக நின்றார். என் குடும்பம் வந்தபோது அவருக்கு எவ்ளோ கஷ்டமாக இருந்திருக்கும் என தெரியும். இந்த உறவினை எப்படி வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் எனக்கு இந்த வீட்டில் நான் நல்ல நண்பனாக பார்ப்பது அவரை தான். கவின் உன்னை நான் ரொம்ப மிஸ் பண்றேன். யார் இதுக்கு என்ன பேர் வெச்சாலும் பரவாயில்லை” என பேசினார்.


Advertisement