ஏன்மா இப்படி கோணிக்கிட்டு போகுது.! அம்மாவிற்கு முத்தம் கொடுக்கும்போது இப்படியொரு போஸா.! வைரலாகும் லாஸ்லியா புகைப்படங்கள்!!
ஏன்மா இப்படி கோணிக்கிட்டு போகுது.! அம்மாவிற்கு முத்தம் கொடுக்கும்போது இப்படியொரு போஸா.! வைரலாகும் லாஸ்லியா புகைப்படங்கள்!!

தமிழ் திரையுலகில் தற்போது பல இளசுகளின் இதயங்களை கொள்ளை கொண்டு கனவுக்கன்னியாக வலம் வரும் நடிகைகளில் ஒருவர் லாஸ்லியா. இவர் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளராவார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதின் மூலம் தமிழ் மக்களிடையே அறிமுகமான அவர் தனது கலகலப்பான சிரிப்பால், அழகால் அனைவரின் மனதையும் கவர்ந்தார்.
பிக்பாஸில் கிடைத்த பெருமையால் அவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.அவர் ஹர்பஜன் சிங் மற்றும் காமெடி நடிகர் சதீஷ் உடன் இணைந்து பிரெண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்தார். பின்னர் பிக்பாஸ் தர்சனுக்கு ஜோடியாக கூகுள் குட்டப்பன் என்ற படத்தில் நடித்தார். இப்படங்கள் அவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தரவில்லை.
இந்த நிலையில் பெரியளவில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில் லாஸ்லியா சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். இந்த நிலையில் அவர் தற்போதும் கிளாமராக புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தனது அம்மாவிற்கு முத்தம் கொடுப்பது போல செல்லும் புகைப்படத்தில் முகத்தை சுளிப்பது போல வைத்துள்ளார். அதனை கண்ட நெட்டிசன்கள் ஏன்மா இப்படி கோணிகிட்டு போகுது என கேள்வியெழுப்பியுள்ளனர்.