சினிமா

ப்பா.. என்னா அழகு! அலைகளோடு விளையாடும் அழகு தேவதை லாஸ்லியா!! மெய்மறந்து ரசிக்கும் நெட்டிசன்கள்!

Summary:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 மக்கள் மத்தியில் பெருமளவில் வரவேற்பை பெ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 மக்கள் மத்தியில் பெருமளவில் வரவேற்பை பெற்றது. இதில் சாண்டி மாஸ்டர், கவின், முகேன், தர்ஷன், லாஸ்லியா, ஷெரின் ஆகியோர் போட்டியாளர்களாக கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றவர் லாஸ்லியா. 

 பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவரின் பாடலும் ஆடலும் அனைவரையும் பெருமளவில் கவர்ந்தது. மேலும் அவருக்கென பெரும் ஆர்மியும் உருவானது. அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவினுடன் காதல் சர்ச்சையில் சிக்கி விமர்சிக்கப்பட்டார். ஆனால்  நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பின் கவினுடன் தொடர்பில் இல்லை.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான லாஸ்லியாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்த நிலையில் அவர் ஹர்பஜன் சிங்குடன் பிரெண்ட்ஷிப், தர்ஷனுடன் கூகுள் குட்டப்பன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

 இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் லாஸ்லியா அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். இந்த நிலையில் அவர் தற்போது வெள்ளை நிற சேலையில் கடற்கரையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் கடல் அலையை ரசிப்பதா அல்லது உனது அழகை ரசிப்பதா என திணறி வருகின்றனர்.


Advertisement