சினிமா பிக்பாஸ்

பள்ளிபருவத்தில் செம குத்தாட்டம் போட்ட லாஸ்லியா.! ரசிகர்களை வாயடைக்கவைத்த ஷாக் வீடியோ இதோ!!

Summary:

losliya dance video

  பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது சீசன் துவங்கி மிகவும் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும்  நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் நடிகர் கமலே மூன்றாவது முறையாக தொகுத்து வருகிறார்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கி 44 நாட்கள் முடிவு பெற்றுள்ள நிலையில் சரவணனை சேர்த்து இதுவரை 6 பேர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளனர். தற்போது 10 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் விளையாடிவருகின்றனர். இதில் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லாஷ்லியாவும் ஒருவர்.

போட்டியின் முதல் நாளில் இருந்தே ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு போட்டியாளர்களில் ஒருவராக லாஷ்லியா உள்ளார். இவர் தனது ஆட்டம், பாட்டம், அழகு என இளைஞர்களை தன் வசப்படுத்தியுள்ளார் லாஷ்லியா. 

இந்நிலையில் பள்ளியில் அவர் டார்லிங் டம்பக்கு என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அதனை லாஸ்லிய்யா ஆர்மியினர் தற்போது வைரலாகி வருகின்றனர்.


Advertisement