சாதாரண துணை நடிகர் என்று கூட பாராமல் நேரில் சென்று ஆறுதல் கூறிய விஜய் சேதுபதி! சிகிச்சைக்கு பின் லோகேஷ் எப்படி உள்ளார் என்று பாருங்கள்!lokesh-L6DBY4

ஆதித்யா டிவியில் காமெடி நடிகராக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகர் லோகேஷ். இவரும் குட்டி கோபியும் இணைந்து செய்யும் காமெடி நிகழ்ச்சிகள் அனைவராலும் ரசிக்கும் விதத்தில் இருக்கும்.

இவர்களின் மொக்கை ஆப் த டே நிகழ்ச்சிக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். காமெடி நடிகர் லோகேஷுக்கும் சில நாட்களுக்கு முன்பு திடீரென இடது கால் மற்றும் கை செயலிழந்தது. அவரின் மருத்துவ செலவிற்கு 7 லட்சம் செலவு ஆகும் என்று கூறிய போது அவரின் நண்பர் குட்டி கோபி வீடியோ வெளியிட்டு உதவிகளை பெற்று சிகிச்சை செய்தனர்.

vijay sethupathi

அதன் பின்னர் குட்டி கோபி சிகிச்சைக்கு தேவையான அளவு பணம் கிடைத்து விட்டதாகவும் இனி யாரும் அந்த வீடியோவை பரப்ப வேண்டாம் என கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது சிகிச்சை முடிந்து ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போன லோகேஷை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.