'தலைவர் 171' எப்போ தொடங்கும் தெரியுமா.? லோகேஷ் கனகராஜ் கூறிய தகவல்.!

'தலைவர் 171' எப்போ தொடங்கும் தெரியுமா.? லோகேஷ் கனகராஜ் கூறிய தகவல்.!


Lokesh kangaraj openup about rajini next movie

தமிழ் திரை உலகில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த்.  இவர் தமிழில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து சூப்பர் ஸ்டார் எனும் அந்தஸ்து பெற்றுள்ளார். மேலும் 80 களின் ஆரம்பங்களில் இருந்து தற்போது வரை தொடர்ந்து நடித்து வருகிறார் ரஜினி.

rajini

தற்போது வரை தொடர்ந்து நடித்து வந்தாலும் இவரின் மீது உள்ள ஈர்ப்பு ரசிகர்களுக்கு குறையவில்லை என்றே சொல்லலாம். சமீபத்தில் இவர் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஜெயிலர்.

இப்படம் மிகப்பெரும் வெற்றியடைந்து ரஜினிக்கும், இயக்குநர் நெல்சன் திலிப் குமாருக்கும் மிகப்பெரும் மைல்கல்லாக அமைந்தது. இதுபோன்ற நிலையில், இப்படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியானது.

rajini

ஆனால் தற்போது லோகேஷ் கனகராஜ் 'லியோ' திரைப்படத்தை இயக்கி வருவதால் ரஜினி படம் எப்போது தொடங்கப்படும் என்ற கேள்வி எழுந்து வந்தது. இதற்கிடையே லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில் 'தலைவர் 171' அடுத்த வருடம் மார்ச் மாதம் தொடங்கும் என்று குறிப்பிட்டிருக்கிறார். இச்செய்தி ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.