போதும்.. நான் விலகுறேன்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் எடுத்த திடீர் முடிவு.! செம ஷாக்கில் ரசிகர்கள்!!

போதும்.. நான் விலகுறேன்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் எடுத்த திடீர் முடிவு.! செம ஷாக்கில் ரசிகர்கள்!!


Logesh kanagaraj releaving from social medial

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களே இயக்கினாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் தமிழில் மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து கைதி, பிகில், மாஸ்டர் மற்றும் விக்ரம் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.

சமீபத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் மாபெரும் ஹிட்டாகி, வசூல் சாதனையை குவித்தது. இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் விஜய்யின் தளபதி 67 திரைப்படத்தை இயக்குகிறார். கேங்க்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகவுள்ள இப்படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் மும்பையில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது சமூகவலைத்தள பக்கத்தில், நான் அனைத்து சமூகவலைதளங்களில் இருந்தும் சிறிது பிரேக் எடுத்துக்கொள்கிறேன். எனது அடுத்த படத்தின் அறிவிப்புடன் நான் விரைவில் மீண்டும் வருவேன். அதுவரை அனைவரையும் பார்த்துக்கொள்ளுங்கள் என பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் ரசிகர்கள் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படபணிகளில் முழு கவனத்தையும் செலுத்த இருப்பதால் இம்முடிவை எடுத்ததாக கூறி வருகின்றனர்.