சினிமா

"லோக்கல் முதல் சென்ட்ரல் வரை" - பட்டைய கிளப்பும் ஆர்.ஜே பாலாஜியின் LKG ட்ரெய்லர்

Summary:

LKG trailer released

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் எல்.கே.ஜி. இப்படத்தில் ஆர்.ஜே பாலாஜி கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும்  நாயகியாக பிரியா ஆனந்த், ஆர்.ஜே.பாலாஜியின் தந்தையாக நாஞ்சில் சம்பத் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துள்ள நிலையில்,அதனை வெளியிடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் படம் வெளியாகவிருப்பதால் படக்குழு விளம்பரப்படுத்தும் பணிகளைத் துவக்கியுள்ளது. குடியரசு தினத்தன்று முதல் பாடல் மற்றும் போஸ்டரை வெளியிட்டது. அந்த போஸ்டருக்கே எதிர்ப்புகள் கிளம்பின. 

இந்நிலையில் LKG படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. இது ஒட்டுமொத்த இந்திய அரசியலின் கலவையாகவே தென்படுகிறது. மேலும் இந்தப்படம் பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 


Advertisement