சினிமா

இளைஞர்களை சுண்டி இழுக்கும் எல்.கே.ஜி திரைப்படம்!! கொட்டி குவியும் வசூல்!!

Summary:

LKG Movie collection


தமிழில் ஆர். ஜே வாக இருந்து  தீயா வேலை செய்யனும் குமாரு, நானும் ரவுடி தான், ஜில் ஜங் ஜக், தேவி, கடவுள் இருக்கான் குமாரு, வேலைகாரன், தானா சேர்ந்த கூட்டம் என பல முக்கிய படங்களில் நடித்தவர் பாலாஜி.

அவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் எல்.கே.ஜி. இதனை வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில் பிரபு இயக்கியுள்ளார். மேலும் இதில் நாயகியாக பிரியா ஆனந்த், ஆர்.ஜே.பாலாஜியின் தந்தையாக நாஞ்சில் சம்பத் ஆகியோர் நடித்துள்ளனர்.

lkg movie க்கான பட முடிவு

பிப்ரவரி 22 ம் தேதியன்று வெளியான எல்.கே.ஜி. படமானது முழுக்க முழுக்க தற்போதைய அரசியல் சூழ்நிலையை மையப்படுத்தி, அதனை கிண்டல் செய்யும் வகையில் உருவாகியுள்ள படம் என பேசப்பட்டு வருகிறது. மேலும் இந்த படம்  வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

எல்.கே.ஜி படம் வெளியாகி தமிழகத்தில் ரூ.2.6 கோடி வசூல் செய்துள்ளது. மேலும்., இந்த படத்திற்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருப்பதால் மேலும், வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


Advertisement