சினிமா

இயக்குனர் தலையில் கல்லை போட்ட நடிகை அஞ்சலி - இரத்த வெள்ளத்தில் இயக்குனர்!

Summary:

Lisa director injured on head because of anjali

அங்காடி தெரு திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சை கவர்ந்தவர் நடிகை அஞ்சலி. அதை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்த அஞ்சலி முன்னணி நாடிகளில் ஒருவராக வளம் வருகிறார். இந்நிலையில் அவரது நடிப்பில் உருவாக்கி வரும் லிசா  படப்பிடிப்பின் போது நடிகை அஞ்சலி தோசக்கல்லை தூக்கி எறிந்து இயக்குனருக்கு நெற்றியில் ரத்த காயத்தை ஏற்படுத்தியுள்ளார் . 

 தற்போது அஞ்சலி நடிப்பில் உருவாகி வரும் படம் லிசா  இப்படத்தை அறிமுக இயக்குனர் ராஜூ விஸ்வநாத் இயக்கி வருகிறார். இப்படம் 3டி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாகும் முதல் இந்திய ஹாரர் திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.  

 

இப்படத்தில் ஏமாலி திரைப்பட நடிகர்  ஷாம், மக்ராந்த் ஆகியோர்  நடித்துள்ளார். இந்த நிலையில், இப்படத்தின் சண்டை காட்சிகள் நேற்று சென்னையில் படமாக்கப்பட்டுள்ளது.

கதையின் படி, பேய் வேடத்தில் நடித்து வரும் அஞ்சலி, தோசைக்கல்லை கேமரா முன்பு தூக்கி வீசவேண்டும் என்பது போல் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. அப்போது, வழக்கம் போல் இயக்குனர் ராஜூ விஸ்வநாத் ஆக்‌ஷன் சொன்னதும், தோசைக்கல்லை தூக்கி வீசியுள்ளார் நடிகை அஞ்சலி.

lisha movie க்கான பட முடிவு

ஆனால், அந்த தோசைக்கல் கேமராவையும் தாண்டி சென்று இயக்குனர்  நெற்றியில் பட்டு ரத்தம் சொட்டியுள்ளது, பின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இயக்குனர் நெற்றியில் தையல் போடப்பட்டுள்ளது.

இதையடுத்து, தான் அப்படி செய்ததற்கு அஞ்சலி மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனால் இது எதிர்பாராமல் நடந்த ஒன்று. இதற்கு ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பெருந்தன்மையுடன் இயக்குனர் கூறியுள்ளார் என்ற செய்திகள் வெளியாகியுள்ளது.


Advertisement