கல்யாணம் எப்போ?? குட் நியூஸ் சொன்ன பிக்பாஸ் அருண்.! ரசிகர்கள் வாழ்த்து!!
லெஜெண்ட்னா சும்மாவா.. லைகர் படத்தை ஓரங்கட்டி டாப்பில் நின்ற "தி லெஜெண்ட்"..! மாஸ்க்கே மாஸ் காட்டிய அருள் சரவணன்..!!
சரவணன் ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் சரவணன் நடிப்பில் கடந்த ஜூலை 28ஆம் தேதி வெளியான திரைப்படம் "தி லெஜன்ட்". இப்படத்தின் மூலம் இவர் தமிழ் திரையுலகில் ஹீரோவாக அதிரடியாக நுழைந்த நிலையில், பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டிருந்த இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்து சேர்ந்தது. மேலும் மக்கள் மத்தியிலும் அந்தளவு வரவேற்பு பெறவில்லை என்று தான் கூறவேண்டும்.
இந்த நிலையில் தெலுங்கில் எடுக்கப்பட்டு தமிழ் டப் செய்து கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி வெளியான படம் லைகர். இப்படத்தில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்திருக்கும் நிலையில், இப்படத்தை பூரி ஜெகநாத் இயக்கியுள்ளார்.
விஜய் தேவரகொண்டா என்பதால் ரசிகர்கள் பலரும் இப்படம் வெளியாவதற்கு முன்னரே மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்துவந்த நிலையில், படம் வெளியானபின் படுமோசமான விமர்சனங்களை பெற்று வருகிறது. மேலும் விஜய் தேவரகொண்டாவின் லைகர் திரைப்படம் IMDB தளத்தில் 1.7 மதிப்பெண்களை மட்டுமே பெற்றுள்ளது.
ஆனால், அருள் சரவணனின் லெஜன்ட் படம் 4.8 மதிப்பெண்களை பெற்று முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் விஜய் தேவரகொண்டாவின் லைகர் படத்தை விட, தி லெஜன்ட் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது தெரியவருகிறது.