அனுஷ்காவிற்கு இப்படியொரு நிலைமையா.? ரசிகர்கள் சோகம்.!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் அனுஷ்கா. இவர் தமிழில் ஆர்யாவுடன் "இஞ்சி இடுப்பழகி" என்ற படத்தில் நடித்திருந்தார். குண்டாக இருக்கும் பெண்ணுக்கு தன் வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்களை நகைச்சுவையுடன் இப்படத்தில் கூறியிருந்தனர்.
'இஞ்சி இடுப்பழகி' படத்தில் குண்டு பெண்ணாக நடிப்பதற்காக அனுஷ்கா, தன் உடல் எடையை பெருமளவு அதிகரித்திருந்தார். ஆனால் இந்தப்படம் முடிந்த பிறகும், உடல் எடையைக் குறைக்க முடியாமல் அனுஷ்கா மிகவும் கஷ்டப்பட்டார்.
இதன்பிறகு இவர் நடித்த 'பாகுபலி-2' படத்தில், அனுஷ்காவின் உடல் எடையை, எடிட் செய்து தான், குறைத்துக் காட்டியதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் அனுஷ்கா நடிப்பில் 'மிஸ்.ஷெட்டி திரு போலிஷெட்டி' என்ற திரைப்படம் வரும் செப்டம்பர் 7ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில், அனுஷ்கா கலந்துகொள்ளவில்லை என்றும், தான் இன்னும் உடல் எடையை குறைக்காததால் தன்னால் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாது என்றும் அனுஷ்கா கூறியுள்ளதாக தெரிகிறது. மேலும் இச்செய்தி இணையத்தில் பரவி அனுஷ்கா ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.