கங்குவா படத்திற்காக உயிரை பணயம் வைத்து புலியுடன் மோதிய சூர்யா.. ரசிகர்கள் ஆச்சர்யம்.!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் 90களில் ஆரம்பங்களில் இருந்து தற்போது வரை தொடர்ந்து நடித்து வருகிறார். தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார் சூர்யா.
இவர் நடிப்பில் வெளியான நேருக்கு நேர், நந்தா, பிதா மகன், காக்க காக்க, ஏழாம் அறிவு, பேரழகன், சிங்கம், வாரணம் ஆயிரம் போன்ற பல திரைப்படங்கள் திரையரங்கில் வெளியாகி வெற்றியடைந்துள்ளன.
தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் கங்குவா. ஐந்து மொழிகளில் உருவாகவிருக்கும் 'கங்குவா' திரைப்படதின் படப்பிடிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
இப்படத்தில் சூர்யா நிஜ புலியுடன் சண்டையிடுவது போல் காட்சி படமாக்கபடவுள்ளது. இந்த சண்டைக் காட்சியில் புலியுடன் சண்டையிடுவதற்காக சூர்யா தனது உயிரை பணயம் வைத்து புலியுடன் பழகி வருகிறாராம். இருந்தபோதிலும் புலி என்றால் எல்லோருக்கும் ஒரு பயம் இருக்க தானே செய்யும். மேலும் சூர்யா புலியுடன் பழகும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.