"பட வாய்ப்பு குறைந்தாலும் சம்பளத்தில் ஒரு ரூபாய் குறைக்க மாட்டேன்" அடாவடி காட்டும் தமன்னா.?Latest news about tamanna

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து வருகிறார். தமிழில் முதன் முதலில் கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

tamanna

இப்படத்திற்கு பின் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் நிலை நாட்டியுள்ளார். தற்போது இவருக்கு தமிழில் பெரிதாக படவாய்ப்புகள் எதுவும் இல்லை.

இது போன்ற நிலையில், நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெயிலர். இப்படத்தில் இடம்பெற்ற தமன்னா நடினமாடிய காவாலா எனும் பாடல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது. இதனைத் தொடர்ந்து மேடைகளில் இப்பாடலுக்கு  நடனமாட 40 லட்சம் வரை சம்பளமாக பெற்று வருகிறாராம் தமன்னா.

tamanna

இச்செய்தி இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தமிழில் பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் சம்பளத்தில் ஒரு ரூபாயை குறைக்க மாட்டார் தமன்னா எனும் செய்தி திரைத்துறையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.