சினிமா

விஜய் சேதுபதியின் லாபம் பட ட்ரைலர் குறித்து வெளியான மாஸ் அப்டேட்! செம குஷியில் ரசிகர்கள்!

Summary:

Laapam movie trailer released update

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்  லாபம்.  இதில் அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளார். மேலும் அப்படத்தில்  கலையரசன், ஜகபதிபாபு, சாய் தன்ஷிகா, ஹரிஷ் உத்தமன் ஆகியோர்  முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

இப்படத்தை புறம்போக்கு என்கிற பொதுவுடைமை படத்தை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன் இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்தை விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் இயக்குநர் 7சி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்துள்ளது. 

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக, படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், போஸ்ட் ப்ரொடக்ஷ்ன் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. 
அதன்படி லாபம் படத்தின் ட்ரெய்லர் ஆகஸ்ட் 22ம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று 5 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.


Advertisement