சினிமா

குட்டி ஸ்டோரி ஸ்டைலில் வெளியான கொரோனா ஸ்டோரி பாடலை கேட்டுள்ளீர்களா.! வைரலாகும் வீடியோ.

Summary:

Kutty story new version of corona story song

மாநகரம் மற்றும் கைதி போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். தற்போது இவர் தளபதி விஜயை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதியும், ஹுரோயினாக மாளவிகா மோகன் நடித்துள்ளார்.

இந்நிலையில் இப்படம் விடுமுறை ஸ்பெஷலாக நேற்று வெளியாகயிருந்த நிலையில் நாடு முழுவதும் ஏற்பட்ட கொரோனா எதிரொலியால் படம் ரீலிஸ் ஆகாமல் தள்ளி போய் உள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் சற்று வருத்தத்தில் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது தளபதி விஜயின் குட்டி ஸ்டோரி ஸ்டைலில் கொரோனா பற்றிய விழிப்புணர்வையும் ஏற்ப்படுத்தும் வகையில் கொரோனா ஸ்டோரி பாடலை மாற்றுத்திறனாளி பாடகர் திருமூர்த்தி பாடியுள்ளார். தற்போது அந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
 


Advertisement