நீங்கள் இருக்கும் வரை நான் ஒருபோதும் தோல்வியடைய மாட்டேன்! நன்றி தெரிவித்த நடிகை குஷ்பூ!Kushboo thanks to fans

இளம் வயதிலேயே சினிமாவில் பிரபலமாகி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் குஷ்பு. இவர் அனைத்து உச்ச நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இவருக்கு தமிழகத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். ஒரு காலத்தில் நடிகை குஷ்புவிற்கு ரசிகர்கள் கோவில் கட்டிய சுவாரஸ்ய சம்பவமெல்லாம் அரங்கேறியுள்ளது. அந்த அளவிற்கு ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார் நடிகை குஷ்பூ.

kushboo
சமீபத்தில் நடிகை குஷ்பூ  தனது ஒரு கண்ணில் கட்டுப்போட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, தனது கண்ணில் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதாகவும், சிறிது காலம் தனது  தனது சமூக வலைதளப்பக்கங்கள் செயலற்று இருக்கும். அனைவரும் வெளியே செல்லும் போது மாஸ்க் அணிந்து கவனமுடன் இருங்கள் என  தெரிவித்துள்ளார். இந்த புகைப்படத்தை  கண்டு ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். இதனையடுத்து பலரும் நீங்கள் விரைவில் குணமடைய இறைவனிடம் வேண்டிக்கொள்கிறோம் என ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.

இந்தநிலையில் அவர் மீது அக்கறை கொண்டவர்களுக்கு நன்றி கூறும் வகையில் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "எனது உடல்நலம் குறித்து ஆயிரத்திற்கு மேலானோர் எனக்கு அனுப்பிய  மெசேஜ்களை என்னால் காண முடிந்தது. மிகவும் மகிழ்கிறேன். என் மீது பொழிந்த அன்பு என்னை நன்றியுடன் நிரப்புகிறது. நீங்கள் என்னுடன் இருக்கும்போது நான் ஒருபோதும் தோல்வியடைய முடியாது. என் கண் இணைப்பு வந்துவிட்டது, நான் மீண்டும் சாலையைத் கடக்க தயாராக இருக்கிறேன். அடிமனதில் இருந்து மீண்டும் நன்றி" என தெரிவித்துள்ளார்.