சினிமா

என்னது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலிலிருந்து நம்ம கதிர் விலகுறாரா! முதன்முறையாக அவரே போட்டுடைத்த உண்மை!!

Summary:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று செம ஹிட்டா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று செம ஹிட்டான தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன்,தம்பி பாசம், கூட்டு குடும்பம் போன்றவற்றை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் ஸ்டாலின், சுஜிதா, ஹேமா, வெங்கட், குமரன் மற்றும் காவியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த தொடரில் கதிர், முல்லை ஜோடிதான் செம பிரபலம். இதில் கதிராக நடித்து வருபவர் குமரன். 

அவர் அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், உங்கள் எல்லோருக்கும் ஷோ பிடித்திருக்கும் என நம்புகிறேன். நான் தான் இந்த ஷோவுக்கு பெஸ்ட் ஆடியன்ஸ், முழுக்க சிரித்து கொண்டிருந்தேன். ஜெயிக்கிறோமோ இல்லையோ, நான் மகிழ்ச்சியாக இருந்தேன். அதே போல நீங்கள் பார்த்ததை கொண்டு மகிழ்ச்சி அடையுங்கள். தற்போது ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்துவோம். அடுத்து என்ன? என பதிவிட்டிருந்தார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து குமரன் விலகலா?

இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள், குமரன் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலிருந்து விலகுகிறாரோ என சந்தேகமடைந்து கேள்வியெழுப்பினர். இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்து குமரன், சமீபத்தில் விஜய் டிவியில் விருது வழங்கும் விழா நடந்தது. அதில் எனக்கு விருது கிடைக்கவில்லை என  சமூக வலைதளங்களில் எனது ரசிகர்கள் சிலர் வருத்தப்பட்டாங்க. ஆதங்கமாக பதிவுகளை வெளியிட்டனர்.

அதற்கு பதிலளிக்கும் வகையில்தான் நான், என் கடமையை சரியா செஞ்சேன். விருது பற்றி யோசிச்சிக்க வேண்டாம். அடுத்து என்ன என்பதை பார்ப்போம் என்று பதிவிட்டிருந்தேன். ஆனால் எனது அந்தப் பதிவை சிலர் தவறாக  புரிந்துகொண்டுள்ளார் என கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement