இடைவேளையில் தொடங்கிய சந்தானத்தின் குலுகுலு.. முரட்டு கலாய்யாக ஆபரேட்டர் மாஸ் அட்ராஸிட்டி..!!kulukulu movie release atrocity

நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகிய குலுகுலு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப்படத்தின் சிறப்புக்காட்சி வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை கிளப்பியிருந்த நிலையில், படத்தை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் சமீபத்தில் வாங்கி தமிழகம் முழுவதும் டிஸ்ட்ரிபியூட் செய்துள்ளது. 

படம் இன்று காலை முதல் திரையிடப்பட்ட நிலையில், கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் திட்டக்குடி நகரில், பெரியசாமி திரையரங்கில் இப்படம் ரிலீஸ் ஆகியிருந்தது. அங்கு 40-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் வந்திருந்த நிலையில், படம் இடைவெளி முதலாக காட்சி இடப்பட்டது. 

Thittakudi

11 மணிக்கு காட்சி தொடங்கிய பின், ரசிகர்கள் படத்தின் தலைப்பு இப்போது வரும், அப்போது வரும் என்று எதிர்பார்த்த பின்னர், 11:40 மணிக்கு படம் திடீரென நிறுத்தப்பட்டது. அப்போது திரையரங்கின் மேலாளர் வருகை தந்து "படம் தவறுதலாக பாதியிலிருந்து காட்சியிடப்பட்டுள்ளது. 

தடங்கலுக்கு மன்னிக்கவும். படத்தை மீண்டும் பதிவிடுகிறோம்" என்று தெரிவித்தார். இதனால் அங்கிருந்த பார்வையாளர்கள் சற்று வியர்ப்பிற்குள்ளாகி, பின்னர் சுதாரித்து சரி என்று சம்மதித்தனர். இதனையடுத்து படம் முதலில் இருந்து திரையிடப்பட்டது.