பழம்பெரும் நடிகை கே.ஆர் விஜயா இரட்டை வேடங்களில் நடிக்கும் புதிய படம்; என்ன படம் தெரியுமா?
பழம்பெரும் நடிகை கே.ஆர் விஜயா இரட்டை வேடங்களில் நடிக்கும் புதிய படம்; என்ன படம் தெரியுமா?

பிரபல பழம்பெரும் நடிகை கே.ஆர் விஜயா கோடீஸ்வரி என்ற புதிய படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.
தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், முத்துராமன் போன்ற முன்னணி திரை நட்சத்திரங்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்தவர் கே.ஆர் விஜயா. அந்த கால தமிழ் சினிமாவில் அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளங்கள் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்சமயம் தமிழ் சினிமாவில் அவ்வப்போது சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கோடீஸ்வரி என்ற திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். ஸ்ரீ ஆண்டாள் அம்பிகை கிரியேஷன் என்ற நிறுவனம் தயாரித்து வரும் இந்தப்படத்தை, சாய் இளவரசன் என்ற புதுமுகம் இயக்கி வருகிறார். மேலும் இந்தப் படத்தில் மோகன், ரிஸ்வான், அஷ்மா, சுப்ரஜா என்ற புதுமுகங்கள் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு தாமஸ் ரத்னம் இசைமைக்கிறார்.
ஒரு கோடீஸ்வர பெண்ணுக்கும், சாதாரண பெண்ணுக்கும் இடையே நடக்கிற மோதல் தான் இந்தப் படத்தின் கதை. படப்பிடிப்புகள் மதுரை, சிவகங்கை, சேலம், ஏற்காடு பகுதிகளில் நடந்து வருகிறது.