ரீமேக்காகும் கோலமாவு கோகிலா! நயன்தாராவாக போவது இந்த பிரபல நடிகையா? வெளியான சுவாரஸ்ய தகவல்!Kolamavu kokila movie remake in kannada language

கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் கோலமாவு கோகிலா. இப்படத்தில் நயன்தாரா, யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், ஆர்.எஸ்.சிவாஜி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் நெல்சன் இயக்கிய இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்தது. அனிருத் இசையமைத்திருந்தார். 

புத்திசாலித்தனம் கொண்ட அப்பாவியான ஒரு பெண் போதைமருந்து கும்பலிடம் சிக்கி அவர்களுக்கே தண்ணீர்காட்டும் காமெடி நிறைந்த படம் கோலமாவு கோகிலா. இப்படம் ஹிட் ஆன நிலையில் இந்தி, தெலுங்கில் ரீமேக் உரிமைக்கு பேசப்பட்டு வந்தது. ஆனால் அந்த படம் தற்போது கன்னடத்தில் ரீமேக் செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. 

Kolamavu kokila

மேலும் இதில் நயன்தாரா கதாபாத்திரத்தில் கன்னடத்தில் முன்னணி நடிகையான ரட்சிதா ராம் நடிக்கவுள்ளார். மேலும் மவுரியா இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் ரீமேக் உரிமை குறித்து லைகா நிறுவனத்திடம் இறுதிகட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.