சினிமா வரலாற்றில் 3000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் சூப்பர் ஸ்டார் படம்.?!

சினிமா வரலாற்றில் 3000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் சூப்பர் ஸ்டார் படம்.?!



kgf-fame-production-company-going-to-produce-a-hungama

தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னனாக இருப்பவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 40 ஆண்டு கால சினிமா வாழ்க்கையில்  அன்றிலிருந்து இன்று வரை நம்பர் 1 இடத்தில் இருப்பது இவர்தான். சமீப காலங்களில் இவர் நடித்த இரண்டு படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவின. இதன் காரணமாக, தற்போது தான் நடிக்கயிருக்கும் படங்களின் கதைகளை மிகவும் தேர்ந்தெடுத்து நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். இவரது நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படம்  பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டு வருகிறது.

Hombale

இந்தத் திரைப்படத்தில் ரஜினியுடன் தமன்னா, மோகன்லால், ஜாக்கி ஷராஃப் உள்ளிட்ட சினிமா உலகின் முன்னணி நட்சத்திரங்கள் கூட்டணியில் திரைப்படத்தின் படப்பிடிப்புகள்  மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஏப்ரல் மாதத்தில் வெளியாக இருந்த திரைப்படம்  சில காரணங்களால் தற்போது செப்டம்பர் மாதம் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இத்திரைப்படத்தினை தொடர்ந்து தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் 'லால் சலாம்' என்ற திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் சூப்பர் ஸ்டார். அந்தத் திரைப்படத்திற்கு பிறகு அவர் நடிக்க இருக்கும் புதிய படங்கள் தொடர்பாக கதை விவாதங்கள் நடைபெற்ற நிலையில், அடுத்து ரஜினியுடன் கை கோர்க்க போகும் இயக்குனர் யார் என்பது பற்றிய உறுதியான தகவல்கள் எதுவும் இல்லை.

இந்நிலையில் 'ஹம்பாளே' என்ற கன்னட சினிமா தயாரிப்பு நிறுவனத்தின்  தயாரிப்பில் உருவான கே ஜி எஃப் மற்றும் கே ஜி எஃப் 2 ஆகிய இரண்டு திரைப்படங்களும் பிரம்மாண்ட வெற்றியை பெற்றதோடு அகில இந்திய அளவில் வசூலிலும் பெரும் சாதனை புரிந்தது. இவர்கள் தயாரித்த காந்தாரா திரைப்படமும்  எதிர்பார்க்காத மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் கொடுத்தது.

தற்போது காந்தாரா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இந்த நிறுவனம் தயாரித்து வருகிறது. இவர்கள் தற்போது சூப்பர் ஸ்டாரை வைத்து 3000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகப்பெரிய ஒரு திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Hombale

அந்தத் தகவல்களின்படி கே ஜி எஃப் மற்றும் காந்தாரா திரைப்படங்களின் வெற்றியினால் வரும் காலங்களில் 5000 கோடி அளவிலான முதலீட்டை சினிமா துறையில் ஹம்பாளே நிறுவனம் முதலீடு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.