தனக்காக அநியாயமாக உயிரை விட்டவர்களுக்காக கேஜிஎப் நடிகர் செய்த காரியம்.! ரசிகர்களுக்கு விடுத்த வேண்டுகோள்!!

தனக்காக அநியாயமாக உயிரை விட்டவர்களுக்காக கேஜிஎப் நடிகர் செய்த காரியம்.! ரசிகர்களுக்கு விடுத்த வேண்டுகோள்!!



kgf-actor-condolences-to-the-fans-who-dead

பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளிவந்த கேஜிஎஃப் படத்தின் மூலம் ராக்கி பாயாக இந்தியளவில் ரசிகர்கள் மனதில் கொடிகட்டி பறப்பவர் நடிகர் யாஷ். அவர் சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்களான கர்நாடக மாநிலம், கடக் மாவட்டத்தைச் சேர்ந்த ஹனுமந்த் ஹரிஜன், முரளி நடுவினாமணி மற்றும் நவீன் காஜி  ஆகியோர் பேனர் வைக்க முயன்றுள்ளனர்.

இப்பொழுது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி, தூக்கி வீசப்பட்டு மூன்று பேரும் உயிரிழந்தனர்.மேலும் அவர்களுக்கு உதவி செய்த மூன்று பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பேனரில் இருந்த இரும்பு ப்ரேம், மின்கம்பத்தில் இருந்த கம்பியில் உரசியதால் மூவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக  கூறப்படுகிறது.

dead

உயிரிழந்த மூவரின் குடும்பத்தினருக்கும் கர்நாடக முதல்வர் 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ளார். இந்நிலையில் தகவலறிந்த நடிகர் யாஷ் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு, கிராமத்திற்கு சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். மேலும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கும் ஆறுதல் கூறியுள்ளார். மேலும் அவர், கொண்டாட்டத்திற்காக வாழ்க்கையை இழக்க வேண்டாம். பொறுப்புடன் செயல்படுங்கள். பேனர்கள் கட்டுவதை நிறுத்துங்கள் என ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.