ஒரே ஒரு போட்டோ ஷூட்! அதிரடியாக கைது செய்யப்பட்ட பிரபல நடிகை! ஏன்? என்னதான் காரணம்னு பார்த்தீங்களா!!

ஒரே ஒரு போட்டோ ஷூட்! அதிரடியாக கைது செய்யப்பட்ட பிரபல நடிகை! ஏன்? என்னதான் காரணம்னு பார்த்தீங்களா!!


kerala actress arrest for photoshoot in temple boat

கேரளாவில் பிரபல சீரியல் நடிகையான நிமிஷா பிஜோ, படகில் போட்டோ ஷூட் நடத்திய நிலையில், சர்ச்சையில் சிக்கி அவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் பிரபல சீரியல் நடிகையாக இருக்கக் கூடியவர் நடிகை நிமிஷா பிஜோ. இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டுள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிமிஷா பிஜோ விதவிதமாக போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அப்பொழுது அவர், பாம்பு போன்ற நீண்ட வடிவில் உள்ள படகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.

கேரளாவில் பல கோவில்களுக்கு சொந்தமாக நீண்ட பாம்பு வடிவிலான படகுகள் உள்ளன. இதனை கேரள மக்கள் மிகவும் புனிதமாக கருதுவர். இவற்றை பூஜை செய்து பிறகே விழாக்களுக்கு பயன்படுத்துவர். இந்நிலையில் நடிகை நிமிஷா பிஜோ, ஜீன்ஸ் பேண்ட், காலில் செருப்பு அணிந்து சாமி ஊர்வலத்தின்போது பயன்படுத்தப்படும் அரன்முலா கோவிலுக்கு சொந்தமான படகில் ஏறி நின்று புகைப்படம் எடுத்துள்ளார். 

kerala actress

இந்த புகைப்படம் வைரலான நிலையில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் நிமிஷா மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து விளக்கமளித்து நடிகை நிமிஷா, இந்தப் படகிற்கு இவ்வளவு புனிதம் இருக்கிறது என்பது எனக்கு தெரியாது. நான் கேள்விப்பட்டதும் கிடையாது. நான் போட்டோஷூட் செய்தபோது பலரும் பார்த்துக் கொண்டிருந்தனர். யாரும் தடுக்கவில்லை. நான் தெரியாமல் செய்து விட்டேன் என கூறியுள்ளார்.