எனக்கே அது ஷாக்கா இருக்கு! ஏன்தான் இப்படி செய்றாங்க.. உண்மையை உடைத்த நடிகை கீர்த்தி சுரேஷ்



keerthi-suresh-talk-about-her-marriage-rumour

தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அதனைத் தொடர்ந்து அவர் பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக உள்ளார்.

 நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது ரஜினியுடன் அண்ணாத்த  மற்றும் இயக்குனர் செல்வராகவனுடன் சாணி காயிதம் போன்ற படங்களில் நடித்து வருகிறார். மேலும் அவர் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் அண்மையில் நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு தொழிலதிபர் ஒருவருடன் திருமணம் நிச்சயமாகிவுள்ளதாக தகவல்கள் பரவி வந்தது.

keerthi Suresh

இந்நிலையில் இதுகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் அவரிடம்  கேட்டபோது அவர், அந்தச் செய்தியை பார்த்து நானே ஆச்சரியப்பட்டேன். எங்கிருந்து இந்த தகவல் வெளியானது என்று தெரியவில்லை. எனக்கு அந்தமாதிரி எந்த ஐடியாவும் கிடையாது. எனக்கு இப்போது திருமணம் செய்துகொள்ள நேரமும் இல்லை. அவர்களெல்லாம் என் சொந்த வாழ்க்கை பற்றி வதந்தி பரப்பாமல் ஏதாவது நல்ல விஷயங்களில் கவனம் செலுத்தினால் நல்லது என கேட்டுக்கொண்டுள்ளார்.