சினிமா

கீர்த்தி சேச்சி..! என்னங்கடா கெட்டப் இது..? இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்..!

Summary:

keerthi suresh new look photo viral

நடிகை கீர்த்தி சுரேஷ் முதன் முதலில் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். அதனை தொடர்ந்து விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். ஆனால் அந்த படம் அந்த அளவிற்கு ரசிகர்களிடையே வரவேற்பை பெறாமல் போனது. 

அதனை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரஜினி முருகன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அவரை பிரபலமடைய செய்தது. அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, சிவகார்த்திகேயன் என தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் கீர்த்தி சுரேஷ் நடித்திவிட்டார் . 

அதிலும் இவர் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இவரது நடிப்பை அனைத்து நடிகர் நடிகைகளும் பாராட்டினார்கள். அதனை தொடர்ந்து தற்போது கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு சினிமாவில் பிஸியாக இருந்து வருகிறார். இந்நிலையில் கீர்த்திசுரேஷ் மலையாள பாரம்பரிய பெண் போல உடையணிந்திருந்த  புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ்  மோகன் லாலுடன் இணைந்து  வரலாற்று படம் ஒன்றில் நடத்தி வருகிறார். அப்படத்தில் இடம்பெற்ற புகைப்படமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.


 


Advertisement