அண்ணாத்த படத்திற்காக செம சூப்பர் ஹிட் படங்களை மிஸ் செய்த நடிகை கீர்த்தி சுரேஷ்! எந்தெந்த படங்கள் பார்த்தீர்களா!!

அண்ணாத்த படத்திற்காக செம சூப்பர் ஹிட் படங்களை மிஸ் செய்த நடிகை கீர்த்தி சுரேஷ்! எந்தெந்த படங்கள் பார்த்தீர்களா!!


keerthi-suresh-missed-two-super-hit-movies-for-annatthe-Z3CUM3

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து நடித்து தற்போது தென்னிந்திய சினிமாவிலேயே டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். 

நடிகை கீர்த்தி சுரேஷ் இறுதியாக அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார். சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் அவர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் தங்கையாக நடித்திருந்தார். இதில் அவரது கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. அண்ணாத்த திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தையே பெற்றது.

keerthi Suresh

ஆனால் சூப்பர் ஸ்டாரின் படத்தில் நடிப்பதற்காக கீர்த்தி சுரேஷ் சூப்பர் ஹிட்டான இரு படங்களின் வாய்ப்பை தவற விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது அவர் இயக்குனர் மணிரத்தினத்தின் “பொன்னியின் செல்வன்” பட வாய்ப்பை தவறவிட்டார் எனவும் பின்னர் அவரது கதாபாத்திரத்தில் திரிஷா நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் 'ஸ்யாம் சிங்கா ராய்” படத்தில் நானிக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை அவர் நிராகரித்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இப்படம்  சூப்பர் ஹிட்டாகி அதில் ஹீரோயினாக நடித்த சாய்பல்லவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.