
நடிகை கீர்த்தி சுரேஷ் தனது நாய்க்கு மாறி மாறி முத்தம் கொடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா, சாமி 2 என பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். மேலும் நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் மட்டுமின்றி, சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
மேலும் சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான பென்குயின் மற்றும் தெலுங்கில் அவர் நடித்த மிஸ் இந்தியா திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது. அதனைத் தொடர்ந்து அவர் தற்போது ரஜினியுடன் அண்ணாத்த மற்றும் இயக்குனர் செல்வராகவனுடன் சாணி காயிதம் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிஸியாக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் அவ்வப்போது தனது லேட்டஸ்ட் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இவ்வாறு அவர் சமீபத்தில் தனது நாய் குட்டியுடன் முத்தம் கொடுத்து விளையாடும் வீடியோ ஒன்றை புதிதாக வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் கொடுத்துவைத்த நாய் என்று வயிறெரிகின்றனர்.
Advertisement
Advertisement