சோகத்தில் குட்டி நடிகையர் திலகம்; ஆறுதல் கூறிய விஷால் !!
சோகத்தில் குட்டி நடிகையர் திலகம்; ஆறுதல் கூறிய விஷால் !!

கீர்த்தி சுரேஷ் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். 2000களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 2013 ஆவது ஆண்டில் கீதாஞ்சலி மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். இவர் தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
கொஞ்சம் மார்க்கெட் சரிய ஆரம்பித்த போது நடிகையர் திலகம் படத்தின் மூலம் அதை சரி செய்துவிட்டார். இதனால் இவருக்கு விஜய்யுடன் சர்கார், விக்ரமுடன் சாமி ஸ்கொயர் என பட வாய்ப்புகள் மீண்டும் குவிகின்றன. விஷாலுடன் சண்டைக்கோழி படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருடன் வரலட்சுமியும் நடிக்கிறார்.
இதனால் அவருக்கு தான் முக்கியத்துவம் அதிகமாக உள்ளது எனக்கு இல்லை என கவலைப்பட்டுள்ளாராம், கீர்த்தி சுரேஷ். இதைப்பார்த்த படக்குழுவும் கவலையில் மூழ்கினர். பிறகு விஷால் தான், ’அப்படிலாம் ஒன்னும் இல்லை, இருவருக்குமே வெயிட்டான ரோல்தான்’ என ஆறுதல் படுத்தினாராம்.