சினிமா

செம அழகு!! பாவாடை தாவணியில் பளபளன்னு இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்.. லேட்டஸ்ட் புகைப்படம்..

Summary:

பாவாடை தாவணியில் மிளிரும் நடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகி

பாவாடை தாவணியில் மிளிரும் நடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

நடிகை கீர்த்தி சுரேஷ் பற்றி அறிமுகம் தேவை இல்லை. அந்த அளவிற்கு தென்னிந்திய முழுவதும் பிரபலமான நடிகைகளில் ஒருவர். ரஜினி முருகன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான இவர், நடிகையர் திலகம் படம் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்டார்.

அது போதாதென்று தற்போது அம்மணி பாலிவுட்டிலும் கலக்கிவருகிறார். தற்போது தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடித்துவருகிறார் கீர்த்தி சுரேஷ். இந்நிலையில் அழகான பாவாடை தாவணி அணிந்து, முகமெல்லாம் சிரிப்புடன் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

தான் குருவாயூர் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்ததாகவும், நீண்ட நாட்களாக பாவாடை தாவணி அணிய வேண்டும் என்ற தனது கனவு இன்று நிறைவேறி இருப்பதாகவும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ். பாவாடை தாவணியில் பார்க்க பளபளன்னு இருக்கும் கீர்த்தி சுரேஷின் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.


Advertisement