சினிமா

கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் முடிவாயிடுச்சாம்..! அந்த அதிர்ஷ்டக்கார மாப்பிளை யார் தெரியுமா.?

Summary:

Keerthi suresh gonna marry multi millionaire soon

தமிழ், தெலுங்கு தற்போது ஹிந்தி என இந்திய அளவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார் கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.

தொடர்ந்து விஜய், விக்ரம், தனுஷ், விஷால் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார். தமிழில் சர்க்கார் படத்திற்கு பிறகு வேறு எந்த படங்களிலும் நடிக்காத நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துவரும் அண்ணாத்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.

மேலும், மிஸ் இந்தியா, பென்குயின் என இவர் நடித்துள்ள இரண்டு படங்கள் வெளியாக காத்துள்ளன. இப்படி தொடர்ந்து சினிமாவில் பிஸியாக இருக்கும் கீர்த்தி சுரேஷுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியாகிவருகிறது.

இந்திய அளவில் பிரபலமான அரசியல் கட்சியை சேர்ந்த, பிரபல தொழிலதிபர், மல்டி மில்லியனர் ஒருவரின் மகனைத்தான் கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்துள்ளார்களாம். கீர்த்தியும் இதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

 திருமணம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement