சினிமா

தொழிலதிபருடன் எனக்கு திருமணமா? தீயாய் பரவிவரும் தகவல்! நடிகை கீர்த்தி சுரேஷ் விளக்கம்!

Summary:

Keerthi suresh explain about rumour about marriage

தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். ஆனால் அந்த படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெறாமல் போனது. 
அதனை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரஜினி முருகன் என்ற திரைப்படத்தில் நடித்தததன் மூலம் பெருமளவில் பிரபலமானார். 

அதன் பிறகு அவர் விஜய், விஷால், சூர்யா, சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் தற்போது ரஜினிகாந்துடன் இணைத்து அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் கீர்த்தி சுரேஷ்க்கு திருமணம் முடிவாகியுள்ளது எனவும், பாஜக கட்சியை சேர்ந்த தொழிலதிபரின் மகன் தான் மாப்பிள்ளை எனவும் தகவல்கள் பரவி வந்தது. 

இந்நிலையில் இதுகுறித்து கீர்த்தி சுரேஷ் கூறியதாவது,  நான் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக வெளிவந்த தகவல் உண்மையானது அல்ல. இது எப்படி பரவியது என்று தெரியவில்லை, ஆச்சரியமாக உள்ளது. திருமணம் பற்றிய ஐடியா இப்போதைக்கு இல்லை. எனது சொந்த வாழ்க்கை பற்றி இதுபோன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம். எனது திருமணம் பற்றிய தகவலை விட தற்போது கொரோனாவை எதிர்த்து போராடுவதில் கவனம் செலுத்துங்கள். நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். சமூக விலகலை கடைப்பிடியுங்கள். உங்கள் அன்புக்குரியவர்களை  பாதுகாப்பாக பார்த்துக்கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.

 

 

 


Advertisement