சினிமா

திருமண கோலத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ்..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!

Summary:

Keerthi suresh bridal look photos

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக இது என்ன மாயம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் சிவகார்த்திகேயன் நடித்த ரஜினிமுருகன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.

அதனை தொடர்ந்து விஜய், விஷால், சூர்யா, விக்ரம் என தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார் கீர்த்தி சுரேஷ். கடைசியாக விஜய்க்கு ஜோடியாக சர்க்கார் படத்தில் நடித்த இவர் அதன்பிறகு சினிமாவிற்கு சற்று ஓய்வு கொடுத்துவிட்டு படங்களில் நடிப்பதை தவிர்த்துவந்தார்.

தற்போது மீண்டும் படங்களில் பிசியாக நடிக்க தொடங்கியுள்ள இவர், சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துவரும் அண்ணாத்த படத்தில் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனா பீதிக்கு நடுவே கீர்த்தி சுரேஷுக்கு திருமணமா என ரசிகர்கள் சிலர் கமெண்ட் செய்துவர, இது விளம்பர ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என கூறப்படுகிறது.


Advertisement