சினிமா

எல்லாத்துக்கும் அது ஒண்ணுதான் காரணம்.. தனது திடீர் திருமணம் குறித்து கயல் ஆனந்தி கூறிய பதில்..

Summary:

தனக்கு நடந்த திடீர் திருமணம் குறித்து விளக்கமளித்துள்ளார் நடிகை கயல் ஆனந்தி.

தனக்கு நடந்த திடீர் திருமணம் குறித்து விளக்கமளித்துள்ளார் நடிகை கயல் ஆனந்தி.

கயல் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை ஆனந்தி. கயல் படம்தான் இவரது பெரிய வளர்ச்சிக்கு காரணம் என்பதால் அந்த படம் வெளியானதில் இருந்து கயல் ஆனந்தி எனவே அடையாளம் காணப்படுவருகிறார். கயல் படத்தை அடுத்து சண்டிவீரன், த்ரிஷா இல்லனா நயன்தாரா, மன்னர் வகையறா, விசாரணை, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட பல்வேறு வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

மேலும் தெலுங்கு மொழி படங்களிலும் நடித்துவந்த இவருக்கு தென்னிந்திய அளவில் பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது. இந்நிலையில் கயல் ஆனந்திக்கு சமீபத்தில் சாக்ரடிஸ் என்பவருடன் திருமணம் நடந்து முடிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. இந்த திடீர் திருமண செய்தியை கேள்விப்பட்ட ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் தனது திருமணம் குறித்து விளக்கமளித்துள்ளார் கயல் ஆனந்தி. "நானும் சாக்ரடிஸும் 4 ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும், இரண்டு வீட்டாரின் சம்மதத்துடன்தான் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து காத்திருந்ததாகவும், அதற்கான நேரம் தற்போது வந்ததால், இருவரும் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டதாகவும்" கயல் ஆனந்தி கூறியுள்ளார்.

மேலும், திருமணம் நடந்துவிட்டாலும் நான் தொடர்ந்து படங்களில் நடிப்பேன் எனவும், தற்போது கைவசம் நான்கு படங்கள் இருப்பதாகவும் கயல் ஆனந்தி கூறியுள்ளார்.


Advertisement