காமெடி நடிகர் கவுண்டமணியின் மகள் செய்த காரியத்தை பாருங்கள் - வியப்பில் பொதுமக்கள்!



kavudamani-daughter

நடிகர் கவுண்டமணி என்றாலே அவரது காமெடி, பாடி லாங்க்வேஜை பார்த்தாலே போதும் சிரிப்பு வந்துவிடும். அந்த காலங்களில் படத்தின் கதை நன்றாக வில்லை என்றாலும் கவுண்டமணி, செந்தில் இணைந்து செய்யும் காமெடிக்காகவே பெரும்பாலான படங்கள் 100 நாள்களுக்கு மேல் ஓடின.

இதுவரை 450 படங்களில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் காமெடி செய்துள்ளார். ஆனால் காமெடி நடிகர் கவுண்டமணி இதுவரை தனது குடும்பத்தைப் பற்றி பெரிதாக எந்த ஒரு தகவலையும் கொடுத்ததில்லை.

இந்நிலையில் சென்னை அடையாறு அரசு புற்றுநோய் காப்பகத்தில் சிகிச்சை பெற்று வரும் ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு ஒரு தம்பதி ஒவ்வொரு மாதமும் உதவி செய்து வருகின்றனர். ஆனால் அவர்கள் யார் என்பது காப்பாற்றி உள்ளவர்களுக்கு கூட தெரியாது.

commedy

ஆனால் தற்போது அதற்கான பதில் கிடைத்துள்ளது காப்பதில் உள்ளவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் உதவி செய்பவர் நடிகர் கவுண்டமணி அவர்களின் மகள் சுமித்ரா மற்றும் மருமகன் வெங்கடாசலம் தான் என தெரியவந்துள்ளது.

இதனை அறிந்த பலரும் மற்றும் காப்பகத்தில் உள்ளவர்களும் அந்த தம்பதியினரை பாராட்டி வருகின்றனர்.