சினிமா

நான் அவருடன் டேட்டிங் செல்ல விரும்புகிறேன்- வெளிப்படையாக கூறிய பிக்பாஸ் கவின்!

Summary:

Kavin would likes to date with selvaragavan

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடர் மூலம் பிரபலமாகி பின்னர் பிக்பாஸ் சீசன் மூன்று மூலம் மக்கள் மத்தியில் தெரிய ஆரம்பித்தவர் நடிகர் கவின். ஒருசில சீரியல், சினிமா என பிசியாக இருந்த கவின் பிக்பாஸ் வீட்டிற்குள் ஜாலியான கதாபாத்திரமாக என்ட்ரி ஆகி பின்னர் காதல், மோதல் என சர்ச்சையில் சிக்கினார்.

இவர் தனது பிக்பாஸ் காதலி லாஷ்லியாவுடன் சேர்வாரா? மாட்டாரா என இவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் இவரிடம் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில், டேட்டிங் யாருடன் செல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்டுள்ளனர்.

இதற்கு பதிலளித்த கவின், இயக்குனர் செல்வராகவனை டேட் செய்ய ஆசை எனவும், அவரை பற்றி கற்றுக் கொள்ள நிறைய விரும்புவதால் அவரை டேட் செய்ய விரும்புவதாக கூறியுள்ளார்.


Advertisement