சினிமா

அடேங்கப்பா! டிப்டாப்பான கலக்கல் புகைப்படத்தை வெளியிட்டு கவின் கூறியுள்ளதை பார்த்தீர்களா? வைரலாகும் புகைப்படம்!

Summary:

Kavin post latest photo

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்து கொண்டு மக்களின் மனதை கவர்ந்தவர் கவின். இவருக்கென  ஆர்மியெல்லாம் உருவாகியது

கவின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து பிரபலமடைந்தவர். அதன் பிறகு பிக்பாஸில் கலந்துகொண்ட அவர்  லாஸ்லியாவுடன் காதல் வயப்பட்டு மேலும்  பிரபலமானார். ஆனால் அது பெரும் சர்ச்சையான நிலையில் அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

 

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய கவின் அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
 இவ்வாறு தற்போது மிகவும் டிப்டாப்பாக வெள்ளைநிற உடையணிந்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். 

மேலும் அதில் நான் இண்டர்வியூக்கு கூட இப்படி ரெடியானது இல்லை டா, என்ன போய் எனவும் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர். 

 


Advertisement