சினிமா பிக்பாஸ்

பிக்பாஸ் வீட்டின் காதல் மன்னனுக்கு மலர்ந்த புதிய காதல்.! இப்பொழுது யாருடன் தெரியுமா?

Summary:

kavin love with sakshi agarwal in bigboss

பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது சீசன் சமீபத்தில் துவங்கி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் நடிகர் கமலே மூன்றாவது முறையாக தொகுத்து வருகிறார்.

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சி என்றால் சர்ச்சைகளுக்கும், காதல் காட்சிகளும்  பஞ்சம் இருக்காது என்பது அனைவரும் அறிந்த ஒன்று.  இந்நிலையில் பிக்பாஸ் வீட்ற்குள் சென்ற இரண்டாவது நாளே சரவணன் மீனாட்சி புகழ் கவின் மீது  போட்டியாளர் அபிராமிக்கு காதல் ஏற்பட்டது. 

kavin abirami க்கான பட முடிவு

அதனை தொடந்து அவரே கவினிடம் தனது காதலை  நேரடியாக தெரிவித்தார். ஆனால் கவின் அவரை காதலை ஏற்றுக்கொள்ளாமல் நண்பர்களாக இருக்கலாம் என எஸ்கேப் ஆனார்.

ஆனாலும் பிக்பாஸ் வீட்டின் உள்ளே காதல் மன்னராக வலம் வந்த கவின் சமீப காலமாக  நடிகை சாக்ஷி அகர்வாலுடன் நெருக்கமாக காணப்படுகிறார். மேலும் இருவரும் இதுகுறித்து பேசிகொள்வது போன்ற பிரமோ வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. 


Advertisement