அடேங்கப்பா.. தலைசுற்ற வைக்கும் பிரமாண்டம்! கோலாகலமாக நடந்த கத்ரீனா கைப் திருமணம்! வெளிவந்த வீடியோ!!

அடேங்கப்பா.. தலைசுற்ற வைக்கும் பிரமாண்டம்! கோலாகலமாக நடந்த கத்ரீனா கைப் திருமணம்! வெளிவந்த வீடியோ!!


Katrina kaif vicky gowshal marriage video viral

பாலிவுட் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் டாப் ஹீரோயினாக வலம் வந்தவர் கத்ரீனா கைஃப். இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்த இவருக்கு என ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவரும் நடிகர் விக்கி கௌசலும் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் அவர்கள் இருவரும் இன்று அவர்களது சம்பிரதாய முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர். அவர்களது திருமணம் ராஜஸ்தானின் உள்ள சவாய் மாதோபூரில் அமைந்துள்ள சிக்ஸ் சென்ஸ் கோட்டையில்  நடைபெற்றுள்ளது. இதில் பாலிவுட் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர். இவர்களது திருமணத்தில் போன் மற்றும் கேமராவிற்கு தடை விதிக்கப்பட்டதால் திருமண புகைப்படங்கள் எதுவும் வெளிவராமல் இருந்தது.

katrina kaif
இது அவர்களின் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்த நிலையில் தற்போது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் மிகவும் கோலாகலமாக, பிரம்மாண்டமாக நடைபெற்ற கத்ரீனா கைப் மற்றும் விக்கி கௌசல் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் பலரும் அந்த ஜோடிக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

katrina kaif